கமெராவில் சிக்கிய மிதக்கும் மர்மபொருள்: வேற்றுகிரகவாசி என சந்தேகம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பெரு நாட்டில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் சிக்கிய மிதக்கும் மர்ம பொருள் வேற்றுகிரகவாசியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

பெரு நாட்டில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் இந்த மிதக்கும் மர்ம பொருள் கமெராவில் சிக்கியுள்ளது. 3 அடி உயரம் கொண்ட இந்த உருவம் அந்த பெட்ரோல் நிலையத்தின் ஒரு பகுதியில் வட்டமிட்டபடியே மிதந்து சென்றுள்ளது.

ஆள் நடமாட்டம் மிகவும் குறைவாக காணப்பட்ட அந்த பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த உருவமானது அடிக்கடி நிறம் மாறியபடியும் இருந்துள்ளது.

முதலில் அங்கிருந்த ஊழியர்களின் கவனத்தில் சிக்காமல் வட்டமிட்ட இந்த 3 அடி உயரம் கொண்ட உருவமானது, பின்னர் அங்கிருந்த ஊழியர்களால் பின்னர் துரத்தப்பட்டுள்ளது.

இதனிடையே வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் ஆந்தனி சோய் என்பவர், முன்னர் இதே பெட்ரோல் நிலையத்தில் இருந்து இதுபோன்ற ஒரு காட்சியினை பதிவு செய்துள்ளார்.

நீல வண்ணத்தை ஒளிர்ந்து கொண்டே அந்தரத்தில் மிதந்தபடி பரபரப்பான அப்பகுதி சாலையை கடந்து சென்றுள்ளது.

மட்டுமின்றி சாலையில் பாய்ந்தபடி செல்லும் வாகனம் ஒன்று அந்த மிதக்கும் பொருளை கடந்து சென்றுள்ளது. இருப்பினும் இந்த ஒளிரும் பொருளுக்கு எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என ஆந்தனி சோய் கூறியுள்ளார்.

முதலில் ட்ரோன் என்று நினைத்த சோய் பின்னர் அதனிடம் இருந்து எவ்வித சத்தமும் வெளிவராதது கண்டு அது இந்த உலகத்தில் உருவாக்கப்பட்டது அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து அந்த பெட்ரோல் நிலையத்தின் ஊழியர்கள் பாதுகாப்பு கேட்டு தங்கள் உரிமையாளரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments