இயற்கை சீற்றங்களால் மோசமான விளைவுகளை சந்திக்கும் நாடுகளின் பட்டியல் வெளியீடு

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

சர்வதேச அளவில் இயற்கை சீற்றங்களால் மோசமான மற்றும் குறைவான விளைவுகளை சந்திக்கும் நாடுகள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

உலகம் முழுவம் நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் குறித்து அண்மையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில், தென் பசுபிக் கடலுக்கு அருகில் அமைந்துள்ள Vanuatu என்ற தீவு நாடு முதல் இடத்தில் உள்ளது. அதாவது, நிலநடுக்கம் மற்றும் பிற இயற்கை சீற்றங்கள் இங்கு அடிக்கடி நிகழ வாய்ப்புள்ளது.

இயற்கை சீற்றங்களால் அதிக பாதிப்புகளை சந்திக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல்:
 1. வானவ்டு (தென் பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு)
 2. டோன்கா (தென் பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு)
 3. பிலிப்பைன்ஸ் (ஆசியாவில் உள்ள ஒரு நாடு)
 4. குடாமேலா (மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு)
 5. பங்களாதேஷ் (ஆசியாவில் உள்ள ஒரு நாடு)
 6. சாலமன் தீவுகள் ( தென் பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு)
 7. புரூனே (ஆசியாவில் உள்ள ஒரு நாடு)
 8. கோஸ்டா ரிகா (மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு)
 9. கம்போடியா (ஆசியாவில் உள்ள ஒரு நாடு)
 10. பப்புவா நியூ கினியா (தென்மேற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு)

மேற்கூறிய இந்த 10 நாடுகளும் இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

இதே போல், சர்வதேச அளவில் இயற்கை சீற்றங்களால் அதிகளவு பாதிக்கப்படாத நாடுகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது. இதில் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கத்தார் முதல் இடம் பிடித்துள்ளது.

இயற்கை சீற்றங்களால் பாதிப்பிற்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியல்:
 1. கத்தார் (மத்திய கிழக்கு ஆசிய நாடு)
 2. மால்டா (ஒரு ஐரோப்பிய நாடு)
 3. சவுதி அரேபியா (மத்திய கிழக்கு ஆசிய நாடு)
 4. பார்படோஸ் (கரீபிய தீவில் அமைந்துள்ள ஒரு நாடு)
 5. கிரெனடா (கரீபிய தீவில் அமைந்துள்ள ஒரு நாடு)
 6. ஐஸ்லாந்து (ஒரு ஐரோப்பிய நாடு)
 7. பஹ்ராய்ன் (மத்திய கிழக்கு ஆசிய நாடு)
 8. கிரிபாதி (மத்திய பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு)
 9. ஐக்கிய அரபு நாடுகள் (மத்திய கிழக்கு ஆசிய நாடு)
 10. சுவீடன் (ஒரு ஐரோப்பிய நாடு)

மேற்கூறிய இந்த 10 நாடுகளும் இயற்கை சீற்றங்களின் பாதிப்புகளில் இருந்து விலகியுள்ள நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments