ஓடும் விமானத்தை பிடிக்க முயன்ற பயணி! சுவாரசியமான சம்பவம்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டில் ஓடும் விமானத்தில் ஏற முயன்ற பயணியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொலிவியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், ஸ்பெயின் நாட்டிலுள்ள மாட்ரிட் நகரிலிருந்து கெனெரியோ நகருக்கு செல்வதற்காக ரேயோன் என்ற நிறுவன விமானத்தில் டிக்கெட்டினை வாங்கியுள்ளார்.

ஆனால், விமான நிலையத்திற்கு காலதாமதமாக சென்றதால் அவர் பயணம் செய்யவிருந்த விமானம் புறப்பட்டு சென்றது.

இதை கண்ட அந்நபர் தான் வைத்திருந்த இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டு திடீரென்று விமான ஓடுதள பாதையில் ஓடியுள்ளார்.

இதை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், தீவிரவாதியாக இருக்கலாம் என சந்தேகித்து மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், அந்த நபர் தான் விமானத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஓடுதளத்தில் ஓடினேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக குறித்த நபருக்கு ரூ.25 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments