மரங்களின் அரசனான அரச மரத்தைப் பற்றி பல சுவாரஸ்யமான உண்மைகள்

Report Print Gokulan Gokulan in இயற்கை

கோவிலுக்குச் சென்றால் அரச மரத்தில் கல்யாண கயிறு, மஞ்சள், குங்குமம், குழந்தை தொட்டில் இட்டு கடவுளாக வணங்குவார்கள். ஊர் பஞ்சாயத்து என்றால் அரச மரத்தடியில்தான் கூட்டம் கூடுவார்கள்.

அவ்வளவு விஷயம் என்ன இருக்கு அரச மரத்தில். அரச மரத்தைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் அரச மரம் இயற்கையாக அதிகமளவில் காணப்படுகிறது. அரச மரம் விரைவாக வளரக்கூடிய ஒரு மரம்.

எல்லா மரங்களுக்கும் முதன்மையாக கருதப்படுவதால் அந்த மரத்திற்கு அரச மரம் என்று பெயர் சூட்டப்பட்டது. அரச மரம் மனிதனுக்கு உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் பலம் தரும் ஆக்சிஜன் வழங்குகிறது.

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் அரச மரங்களை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தெய்வ வடிவங்களாகக் கருதப்படும் பலவகைமரங்களுள் அரசமரம் முதன்மையானது. மரங்களின் அரசன் என்று போற்றப்படுவது, தேவலோகத்து மரம் என்றும் அரச மரத்தை வர்ணிப்பார்கள்.

பிரம்மாவின் சக்தி இம்மரத்தில் இருப்பதால் அரசமரக்காற்றை நாம் சுவாசித்தால் ஆயுளும் கூடும். உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என்று நம் முன்னோர்களால் கூறப்பட்டு வருகிறது.

திருமணத்தடையுள்ளவர்களும், புத்திர தோஷம் உள்ளவர்களும் அரச மரத்தை வணங்கினால் அனைத்தும் தோஷங்கள் நீங்கி சுபம் கிடைக்கும் என்று வேத சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமரத்தடியில் விநாயகப் பெருமானையும், நாகராஜனையும் வைத்து வழிபடுவது வழக்கம். இவர்களை வழிபட்டால் காரியத்தடைகள் அகலும்.

கனிவான வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அரச மரம் அரசன் என்பதால் ஊர் பஞ்சாயத்துகளில் அரச மரத்தடியில் அமர்ந்து தான் நீதி வழங்குவார்கள்.

அரசமர இலைகளின் சலசலப்பு ஆலய மணிபோல இருக்கும். அதன் கிளைகள் பரந்து காணப்படும். பட்டை சாம்பல் நிறமும், இலைகள் மெல்லியவையாகம், இலை நுனி வால்போல் நீண்டு இருக்கும்.

இம்மரத்தின் இலைகளை இளம்இலையை கால்நடைகளுக்கும், யானைக்கும் உணவாக கொடுக்கின்னர். ஆனால் பெரிய இலைகளில் புல்லைவிட 2-3 மடங்கு கூடுதலாகப் புரசச்சத்தும் சுண்ணாம்புச்சத்தும் இருப்பதனால் அவ்வளவு சிறந்த தீவனமாக கொடுக்கப்பட்டார்கள். இருப்பினும் அவற்றின் சக்கையைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.

வட இந்தியாவில் அரம மர இலைகளை பட்டுப் பூச்சிகளுக்கு உணவாக கொடுக்கின்றனர். இம்மரத்தின் கனிகள் பறவைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

பறவைகள் விரும்பி சாப்பிடும். அரச மர பட்டைகள் துணிகளுக்குச் சாயம் போடுவதற்கு பயன்படுகிறது. மரச மரத்தின் இலை, பட்டை, கனி மற்றும் விதைகள் எல்லாமே பயன் கொடுக்கக்கூடியவை.

அரச மர இலைகள் ஆயுர்வேத மருந்தாக பயன்படுகின்றன.

  • இலைகளையும், காய்களையும் எடுத்து காய வைத்து, பொடியாக்கி நீருடன் கலந்து 14 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகும்.
  • கண் வலிக்கு, அரச மர இலைகளை கசக்கி கண்களில் ஊற்றினால், சில நிமிடங்களில் வலி குறைந்து விடும்.
  • அரச மரத்தின் கொழுந்து இலைகளால் பல் துலக்கும்போது, பற்களில் உள்ள கறைகளை போக்குவதோடு, 'பாக்டீரிய' தாக்குதல்களையும் தடுக்கும்.
  • பாம்பு கடித்து விட்டால், அரச மர இலைகளை கசக்கி இரண்டு ஸ்பூன் சாறு பாதிக்கப்பட்டவருக்கு கொடுததால் விஷம் உடல் முழுவதும் பரவால் தடுக்கும்.
  • இளஞ்சிவப்பான அரச மர இலைகளை எடுத்து சாறாக்கி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் மூன்று முறை பருக, மஞ்சள் காமாலை ஆரம் நிலையை உடனே சரிபடுத்தலாம்.
  • அரச இலைகளின் சாற்றை தொடர்ந்து சருமத்தில் பூசினாலும் உடல் தொடர்பான அரிப்புகள், தடிப்புகள் போன்றவை ஏற்படுவது குறையும்.
  • சாப்பிட பிடிக்கவில்லையென்றால் இலைகளை மிக்சியில் அரைத்து பாலில் கலந்து தேநீராக குடிக்கலாம்.
  • அரச இலைகளை கற்கண்டை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அதை நீருடன் நன்கு கலந்து, வடிகட்டிய பின், இந்த நீரை தினமும் குடித்து வந்தால், கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
  • இளம் தளிர்களை எடுத்து, இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அந்த தண்ணீரை குடித்தால் இதயம் படபடப்பு குறையும், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
  • சர்க்கரை நோய் பிரச்னை உள்ளோர் அரச மர காயின் பொடியையும், கடுக்காய் பொடியையும் சமமான அளவில் பாலுடன் சேர்ந்து தினமும் குடித்து வர, உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்