கார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது Tesla நிறுவனம்

Report Print Givitharan Givitharan in வாகனம்

இலத்திரனியல் கார் வடிவமைப்பு நிறுவனமான Tesla இவ் வருடத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அதவாது 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் சுமார் 97,000 கார்களை விற்பனை செய்துள்ளது.

இது கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையினை விடவும் அதிகமாகும்.

100,000 எனும் எண்ணிக்கையை எட்டுவதற்கு இன்னும் சில ஆயிரம் கார்களே விற்பனை செய்யப்பட வேண்டியிருக்கின்றது.

இதற்கு முன்னர் கடந்த வருடத்தின் நான்காம் காலாண்டுப் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 95,200 ஆக காணப்பட்டது.

இந்த எண்ணிக்கை தற்போது முறியடிக்கப்பட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை இவ் வருடத்தின் எஞ்சியுள்ள காலாண்டுப் பகுதியில் இந்த எண்ணிக்கையினை மேலும் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்