பாதுகாப்பிற்காக கூடுதல் வசதிகளுடன் கூகுளின் புதிய திட்டம்... வெளிநாடுகளுக்கு ஈடாக!

Report Print Kavitha in வாகனம்

கூகுள் நிறுவனம் தற்போது இந்தியாவில் காரில் செல்லும்போது வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடு உள்ள விவரத்தையும் காட்டும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது

அத்துடன் வேகக் கட்டுப்பாட்டை கண்காணிக்கும் கேமிராக்கள் எந்தெந்த பகுதிகளில் உள்ளன என்ற வசதியையும் அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரேஸில், மெக்ஸிகோ, கனடா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே இதுபோன்ற வசதிகள் வழங்கப்பட்டது.

தற்போது கூகுள் நிறுவனம் இந்தியாவிலும் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் நெடுஞ்சாலையில் செல்லும்போது எந்த பகுதியில் ஸ்பீடு கேமரா உள்ளது வேறு எந்தப் பகுதிகளில் ஸ்பீடு கேமிரா உள்ளது என்பதை வாகன ஓட்டிகள் உணர்ந்து கொள்ள முடியும் என்பதை வரைபடத்தில் உணர்த்தும்.

இது வரைபடத்தில் நீல நிற குறியீடாக ஒளிரும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் சென்று அதற்காக அபராதம் கட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது.

அதேபோல சாலையில் எந்தெந்த பகுதிகளில் விபத்து நிகழ்ந்துள்ளது என்ற எச்சரிக்கை சமிக்ஞையையும் இது காட்டும்.

மேலும் குறிப்பிட்ட விபத்து பகுதியைக் கடக்கும் வரை இது ஒளிரும். அத்துடன் அந்த விபத்து பகுதியைக் கடப்பதற்கு எவ்வளவு நேரமாகும் என்ற விவரமும் இதில் தெரியவரும். இதன் மூலம் விபத்து பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையோடு வாகனத்தை ஓட்டவும் இது உதவுகிறது.

குறித்த வசதி ஆன்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் கேமிராக்களில் மட்டுமே கிடைக்கும். ஐஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படும் கேமிராக்களில் இந்த வசதி இன்னும் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்