மின்சாரத்தில் இயங்கும் 30 வாகனங்களை அறிமுகம் செய்யும் Audi

Report Print Givitharan Givitharan in வாகனம்

பெட்ரோல் போன்ற எரிபொருட்களால் சூழல் வெகுவாக மாசடைவதை தொடர்ந்து பல்வேறு வாகன வடிவமைப்பு நிறுவனங்களும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இதில் விலையுயர்ந்த ஆடம்பர வாகனங்களை வடிவமைக்கும் Audi நிறுவனமும் களமிறங்கியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் சுமார் 30 வகையான இலத்திரனியல் வாகனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் எதிர்வரும் மாதங்களில் E-Tron எனும் புதிய இலத்திரனியல் காரினை Audi நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர A6, A7, A8 மற்றும் Q5 Plug-in Hybrids போன்ற கார்களும் மின்சாரத்தில் இயங்கக்கூடியதாகவே அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்