தானியங்கி கார் வடிவமைப்பில் ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு

Report Print Givitharan Givitharan in வாகனம்

முன்னணி கார் வடிவமைப்பு நிறுவனங்கள் உட்பட கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் தானியங்கி கார் வடிவமைப்பில் முழு மூச்சாக இறங்கியிருந்தன.

எனினும் பரீட்சார்த்த முயற்சிகளின்போது ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக சில நிறுவனங்கள் இத் திட்டத்தினை கைவிட்டன.

அதேபோன்று ஆப்பிள் நிறுவனமும் ஆரம்பத்தில் குறித்த கார்களுக்கான ஹார்ட்வெயார் பகுதிகளை வடிவமைக்க ஆரம்பித்தது.

பின்னர் சொவ்ட்வெயார் பகுதிகளை வடிவமைக்க ஆரம்பித்திருந்தது.

இப்படியிருக்கையில் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது தானியங்கி கார் வடிவமைப்பதில் பணியாற்றுபவர்களில் 190 பேரை பணி இடைநிறுத்தம் செய்யவுள்ளது.

இதில் 38 பேர் பொறியியல் நிகழ்ச்சி முகாமையாளர்கள், 33 பேர் ஹார்ட்வெயார் பொறியலாளர்கள், 31 பேர் டிசைன் பொறியியலாளர்கள், மற்றும் 22 மென்பொருள் வடிவமைப்பாளர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்