நடக்கும் கார்கள்: பிரம்மிக்க வைக்கும் ஹையுண்டாய் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in வாகனம்

கார் வடிவமைப்பிற்கு பெயர் பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாக Hyundai திகழ்கின்றது.

இந்த தென் கொரியாவை தளமாகக் கொண்டு செயற்படும் நிறுவனமாகும்.

தற்போது Hyundai நிறுவனம் யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று மிகவும் பிரபல்யமாகி வருகின்றது.

கார் தொழில்நுட்பத்தின் மற்றுமொரு புரட்சியை உள்ளடக்கியதாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது வழமைக்கு மாறாக கார்கள் கால்களை மடித்து நான்கு கால் விலங்குகளைப் போன்று நடக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ரோபோ தொழில்நுட்பமாகும்.

இவ்வாறிருப்பதனால் பாறைகள் அல்லது பள்ளம் மேடு நிறைந்த பகுதிகளில் இலகுவாக நகர்ந்து செல்வதற்கு இப் பொறிமுறை பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers