கடந்த மாதம் பாரிய சரிவை எதிர்நோக்கியுள்ள ஸ்மார்ட் கைப்பேசி விற்பனை

Report Print Givitharan Givitharan in மொபைல்

உலக அளவில் கடந்த மாதம் ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையானது பாரிய சரிவை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத கைப்பேசி விற்பனையானது 14 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Counterpoint எனும் நிறுவனமே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலே இந்த வீழ்ச்சிக்கு காரணம் எனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை சீனாவில் மாத்திரம் கடந்த மாத கைப்பேசி விற்பனையானது கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 38 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்