சாம்சுங் நிறுவனம் கடந்த வாரம் Galaxy S20 Ultra எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இக் கைப்பேசியில் கமெராவுக்கே மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
இதில் 8K தொழில்நுட்பத்தினைக் கொண்ட வீடியோ பதிவு செய்யக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த iPhone 11 Pro Max கைப்பேசியிலும் கமெராவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது இவ் இரு கைப்பேசிகளின் சிறப்பியல்புகளையும் ஒப்பீடு செய்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Mrwhostheboss என்பவர் இவ் வீடியோவினை வெளியிட்டுள்ளார்.
குறித்த வீடியோவை கீழே காணலாம்.
இதேவேளை இன்னும் சில மாதங்களில் iPhone 12 கைப்பேசியினை ஆப்பிள் நிறுவனம் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.