ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள iPhone 11 Pro மற்றும் 11 Pro Max கைப்பேசிகளின் சிறப்பம்சங்கள் இதோ

Report Print Givitharan Givitharan in மொபைல்

உலகளாவிய ஸ்மார்ட் கைப்பேசி பிரியர்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்றைய தினம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் iPhone 11 Pro மற்றும் 11 Pro Max கைப்பேசிகள் உட்பட மேலும் சில ஆப்பிள் உற்பத்திகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

இவற்றில் iPhone 11 Pro கைப்பேசியானது 5.8 அங்குல அளவு, 2436×1125 Pixel Resolution உடைய Super Retina XDR தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அதேபோன்று iPhone 11 Pro Max கைப்பேசியில் 6.5 அங்குல அளவு, 2688×1242 2436×1125 Pixel Resolution உடைய Super Retina தொடுதிரை தரப்பட்டுள்ளது.

மேலும் இரு வகையான கைப்பேசிகளிலும் Apple A13 Bionic processor உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 64GB, 256GB மற்றுமு் 512GB சேமிப்பு நினைவகங்களை கொண்ட பதிப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

எனினும் இவற்றின் பிரதான நினைவகம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

தவிர இரு கைப்பேசிகளும் நீரில் 4 மீற்றர்கள் ஆழம் வரை 30 நிமிடங்களுக்கு நீர் உட்புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தலா 12 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெரா மற்றும் 12 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்