மூன்று பிரதான கமெராக்களுடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy M30 கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனம் விரைவில் Galaxy M30 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி 6.4 அங்குல அளவுடையதும், 2400 x 1080 Pixel Resolution உடையதுமான FHD+ தொடுதிரையினை இக் கைப்பேசி கொண்டுள்ளது.

அத்துடன் Samsung Exynos 9610 Mobile Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

தவிர 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்கள் மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய மூன்று பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.

மேலும் Android Pie இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் 6000mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்