கீக்பென்ச் என்ற தளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் தற்போது லீக் ஆகியுள்ளது.
இது கேலக்ஸி எம்10எஸ் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் SM-M107F எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளது.
புதிய கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் முந்தைய கேலக்ஸி எம்10 மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
கீக்பென்ச் தளத்தின்படி SM-M107F ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 7885 பிராசஸர், 3 ஜி.பி. ரேம்மும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் மற்றும் புதிய ஒன் யு.ஐ. இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தள சோதனையின் சிங்கில் கோரில் 1217 புள்ளிகளையும், மல்டி-கோரில் 3324 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.