32MP செல்ஃபி கமெரா கொண்டு அறிமுகமாகும் Xiaomi Redmi Y3 கைப்பேசியுடன் கிடைக்கும் வரப்பிரசாதம்

Report Print Givitharan Givitharan in மொபைல்

Xiaomi நிறுவனமானது Redmi Y3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விற்பனைக்கு வந்துள்ளது.

இதில் 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா முதன் முறையாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் உடைய கைப்பேசியின் விலை 9,999 இந்திய ரூபாய்கள் ஆகும்.

அதேபோன்று 4GB RAM கொண்ட கைப்பேசியின் விலை 11,999 இந்திய ரூபாய்கள் ஆகும்.

இக் கைப்பேசியினை கொள்வனவு செய்பவர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் 1120GB கொள்ளளவுடைய 4G டேட்டாவினை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அமேஷான் தளத்திலிருந்து Xiaomi Redmi Y3 கைப்பேசியினை கொள்வனவு செய்ய முடியும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers