ஐபோன்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்: காரணம் இதுதான்

Report Print Givitharan Givitharan in மொபைல்

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை கடந்த திங்கட்கிழமை சீனா வெளியிட்டுள்ளது.

இதற்கு பிரதான காரணமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகரித்தமை விளங்குகின்றது.

இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனமானது தனது ஐபோன்களின் விலையையும் 14 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக J.P.Morgan எனும் ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதன்படி விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் iPhone X கைப்பேசியின் விலை 1,140 டொலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இவ்விலை அதிகரிப்பு தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் எந்த அறிவித்தலையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்