இந்தியாவின் ஸ்மார்ட் கைப்பேசி பாவனை அடைந்துள்ள அசுர வளர்ச்சி

Report Print Givitharan Givitharan in மொபைல்

கடந்த வருடங்களை விடவும் இவ்வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கைப்பேசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2019 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஸ்மார்ட் கைப்பேசி இறக்குமதியானது 4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது 31 மில்லியன்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ள கைப்பேசிகளுள் 15 சதவீதமானவை சாம்சுங் கைப்பேசிகளாகவும், 13 சதவீதமானவை லாவா கைப்பேசிகளாகவும், 8 சதவீதமானவை நோக்கிய கைப்பேசிகளாகவும், 7 சதவீதமானவை ஐடெல் கைப்பேசிகளாகவும் காணப்படுகின்றன.

இந்த தகவலை கவுன்டர் பொயிண்ட் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் அன்ஸிகா ஜெயின் தெரிவித்துள்ளார்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்