ஐபோன்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் முயற்சியில் ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in மொபைல்

தற்போது உலகளவில் இலத்திரனியல் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளது.

இதனால் இலத்திரனியல் கழிவுகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.

இவற்றினால் சூழல் உட்பட உயிரினங்களுக்கு பாரிய ஆபத்துக்கள் காணப்படுகின்றன.

இதனை தவிர்ப்பதற்கு சிறந்த முறையாக இலத்திரனியல் பொருட்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்த முடியும்.

எனினும் ஸ்மார்ட் கைப்பேசிகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கு உரிய பொறிமுறை ஒன்று இதுவரை உருவாக்கப்படாமல் இருந்தது.

ஆனால் தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கான முயற்சிகளில் களமிறங்கியுள்ளது.

இதன்படி அவுஸ்டின், டெக்ஸாசிலுள்ள ஆய்வுகூடம் ஒன்றில் ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்