மலேசியாவில் அறிமுகமாக இருக்கும் ஒப்போ அவெஞ்சர்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன்

Report Print Kavitha in மொபைல்

ஒப்போ நிறுவனம் மலேசியாவில் ஏப்ரல் 24 ஆம் தேதி தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் புளு மற்றும் ரெட் நிற அவெஞ்சர்ஸ் லோகோ மற்றும் புதிய அவெஞ்ர்ஸ் லோகோவை தவிர புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது. தற்போது இதில் அடங்கியுள்ள சிறப்பம்சங்களை பற்றி பார்ப்போம்.

சிறப்பம்சம்
 • இதில் 128 ஜி.பி மெமரி வழங்கப்படுகிறது.
 • ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்டான்டர்டு எடிஷனில் 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டிருக்கிறது.
 • ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD பிளஸ் பானாரோமிக் ஸ்கிரீன்.
 • மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்.
 • 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.
 • புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி.
 • பிரைமரி கெமரா, அல்ட்ரா நைட் மோட், டேசிள் கலர் மோட் மற்றும் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கெமரா, ஏ.ஐ. என்ஜின், அல்ட்ரா-க்ளியர் என்ஜின்.
 • முன்பக்கம் 16 எம்.பி. செல்ஃபி கெமரா வழங்கப்பட்டுள்ளது.
 • 3D கிரேடியன்ட் பேக், தண்டர் பிளாக் நிறத்தில் வழங்கப்படவுள்ளது.
 • புதிய ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹச். பேட்டரி.
 • VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers