முதன் முறையாக 100 MP கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்பெசி வடிவமைப்பில் களமிறங்கியுள்ளன.

இதனால் அடுத்தடுத்து வியக்க வைக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இப்படியிருக்கையில் 100 மெகாபிக்சல்களை உடைய கமெராவினைக் கொண்ட கைப்பேசி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Lenovo நிறுவனம் முதன் முறையாக 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக ஸ்பெயினின் பார்சிலோனாவில் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் அறிவித்திருந்தது.

Lenovo Z6 Pro எனும் குறித்த ஸ்மார்ட் கைப்பேசியே 100 மெகாபிக்சல்களை கொண்ட கமெராவுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த தகவலை Lenovo நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers