Xiaomi அறிமுகம் செய்யும் அட்டகாசமான மொபைல் சார்ஜர்: வெறும் 17 நிமிடங்கள் போதும்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஸ்மார்ட் கைப்பேசிகளை வெகு விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய தொழில்நுட்பங்களை உடைய சார்ஜர்களை வெவ்வேறு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

இதேபோன்று தற்போது Xiaomi நிறுவனமும் இதே தொழில்நுட்பத்தினைக் கொண்ட சார்ஜர் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இச்சார்ஜர் ஆனது 100W வலு உடையதாகக் காணப்படுகின்றது.

இதன் மூலம் 4000mAh உடைய மின்கலம் ஒன்றினை வெறும் 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

இதேவேளை Oppo நிறுவனம் அறிமுகம் செய்துள்ளர் சார்ஜ் ஒன்று 3,700mAh மின்கலத்தினை 65 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு இதே 17 நிமிடங்களை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Xiaomi அறிமுகம் செய்த சார்ஜரே தற்போது மின்கலங்களை அதி வேமாக சார்ஜ் செய்யக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers