Huawei P30 கைப்பேசி தொடர்பில் இறுதி நேரம் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in மொபைல்

Huawei நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Huawei P30 இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

அத்துடன் இக்கைப்பேசில் 5G வலையமைப்பு தொழில்நுட்பமும் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது வெளியான தகவல்களின்படி இக் கைப்பேசியில் 5G தொழில்நுட்பம் இல்லை என தெரியவந்துள்ளது.

இந்த தகவலை ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Richard Yu உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் இக் கைப்பேசியினை தொடர்ந்து அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய கைப்பேசியில் இத் தொழில்நுட்பம் உள்ளடக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers