அன்ரோயிட் கைப்பேசிகளின் மின் பாவனையை பாதிக்கும் விளம்பரங்கள்

Report Print Givitharan Givitharan in மொபைல்

அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் இலவசமான அப்பிளிக்கேஷன்கள் பலவற்றில் விளம்பரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சில விளம்பரங்கள் அன்ரோயிட் கைப்பேசிகளின் மின்கல பாவனையை வெகுவாக பாதிக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி தகவலை Buzzfeed எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பனர் வகை விளம்பரங்களின் பின்னணியில் பயனர்களின் அனுமதியின்றி விளம்பர வீடியோக்கள் இயங்குவதனாலேயே இப்பாதிப்பு ஏற்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விளம்பரங்கள் விளம்பரதாரர்களுக்கு பணத்தை ஈட்டிக்கொடுக்கின்ற போதிலும் பயனர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers