தொடங்கிய சில நிமிடங்களிலேயே 1.5 லட்சம் விற்றுத் தீர்ந்த ரியல்மி 3 ஸ்மார்ட்போன்!

Report Print Kabilan in மொபைல்

இந்தியாவில் realme 3 ஸ்மார்ட்போன்கள், சுமார் 1.5 லட்சம் அளவில் சில நிமிடங்களில் விற்றுள்ளதாக realme நிறுவனம் தெரிவித்துள்ளது.

realme நிறுவனம் realme 3 ஸ்மார்ட்போனை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. 3 ஜி.பி ரேம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999 என்றும், 4 ஜி.பி ரேம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999 என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் realme 3 ஸ்மார்ட்போன் விற்பனை நேற்று மதியம் 12 மணிக்கு துவங்கியது. விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறைவுற்றது. அதில் 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக realme நிறுவனம் அறிவித்துள்ளது.

முதல் விற்பனை அமோக வரவேற்பினைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் realme 3 ஸ்மார்ட்போன் விற்பனை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு 8 மணிக்கு மீண்டும் விற்பனைக்கு வந்தது.

இந்த விற்பனை மார்ச் 13 முதல் மார்ச் 15ஆம் திகதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் மட்டுமே இரண்டு முறை நடைபெற்ற விற்பனையில், மொத்தம் சுமார் 2,10,000 realme 3 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்