பொப் அப் செல்ஃபி கமெராவுடன் அறிமுகமாகும் OnePlus 7 கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
42Shares

வழமைக்கு மாறான செல்ஃபி கமெராவுடன் OnePlus 7 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

அதாவது பொப் அப் எனப்படும் மேலெழக்கூடிய செல்ஃபி கமெரா உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவ்வசதி பயனர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் முன் பகுதியை முழுவதுமாக உள்ளடக்கிய திரையினைக் கொண்டுள்ளது.

இது தவிர Qualcomm Snapdragon 855 Mobile Processor, பிரதான நினைவகமாக 8GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் ஏனைய சிறப்பம்சங்கள் உட்பட விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்