சாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசியின் பெயர் வெளியானது

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனம்உட்பட மேலும் சில நிறுவனங்கள் இவ்வருடத்தில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளன.

இது தொடர்பான அறிவித்தல்கள் கடந்த வருடமே விடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய மடிக்கக்கூடிய கைப்பேசியின் பெயர் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பாக டுவீட் செய்து வரும் Evan Blass என்பவர் தனது டுவீட்டின் ஊடாக இக்கைப்பேசியின் பெயர் Samsung Galaxy Fold என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இக் கைப்பேசியானது 7.3 அங்குல அளவு உடையதாக இருப்பதுடன் மடிக்கும்போது 4.6 அங்குல அளவுடைய திரையைக் கொண்ட கைப்பேசியாக செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்