ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடல் விலை குறைகிறது..!

Report Print Abisha in மொபைல்

ரியல்மி நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பைவெளியிட்டுள்ளது. அதன்படி ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. 3ஜிபி ரேம் கொண்ட ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,999-ஆகஇருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி யூ1ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில்விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன்பொதுவாக இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி மீடியாடெக் ஹெலியோ பி70 ஆக்டோ-கோர்சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா கொண்டுள்ளது, பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும்எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவுசார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. எனவே மிகத்துல்லியமான புகைப்படங்கள் மற்றும்வீடியோக்களை இந்த ஸ்மார்ட்போனின் மூலம் எடுக்க முடியும்.இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றிருக்கும்,பின்பு வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ யுஸ்டி-போர்ட், ஒடிஜி ஆதரவு, 3.5எம்.எம் ஆடியோ ஜாக்,ஜிபிஎஸ் மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்