ஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

இந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து வைக்கின்றது ஹுவாவி நிறுவனம்.

Huawei Y9 2019 எனும் இக் கைப்பேசியானது எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது.

இக் கைப்பேசியானது 6.5 அங்க அளவுடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இதனுடன் Kirin 710 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய டுவல் செல்ஃபி கமெரா, 16 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெராக்கள் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

கூகுளின் Android 8.1 Oreo இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியின் விலையானது 15,990 இந்திய ரூபாய்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்