அறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி: விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

நோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அண்மைக்காலமாக அறிமுகம் செய்துவருகின்றது.

இவற்றின் வரிசையில் தற்போது Nokia 7.1 எனும் மற்றுமொரு புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது Qualcomm Snapdragon 636 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இதன் தொடுதிரையானது 5.84 அங்குல அளவுடையதாகவும், 2280 x 1080 Pixel Resolution, FHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும் இருக்கின்றது.

தவிர 12 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்கள் உடைய இரு பிரதான கமெராக்களையும், 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெராவினையும், 3060 mAh மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக் கைப்பேசியின் விலையானது 283 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers