5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் OnePlus 7 கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

அடுத்த வருடம் சாம்சுங் நிறுவனம் தனது முதலாவது 5G வலையமைப்பு தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது.

ஆப்பிள் நிறுவனமும் அடுத்த வருடம் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஐபோன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டிற்கு பின்னரே அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த கைப்பேசி உற்பத்தி நிறுவனம் OnePlus 7 எனும் 5G வலையமைப்பில் இயங்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை 2019 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்கின்றது.

இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் குறித்த கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

எனினும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெறும் Mobile World Congress நிகழ்வில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers