அதிக வினைத்திறன் வாய்ந்த கைப்பேசியாக அறிமுகமாகியது Xiaomi Mi Mix 3

Report Print Givitharan Givitharan in மொபைல்

Xiaomi Mi Mix 3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியானது ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியில் மூன்று வகையான மொடெல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றுள் இதுவரை ஸ்மார்ட் கைப்பேசி உலகில் இல்லாத அளவிற்கு வினைத்திறன் கூடிய மொடல் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் 6.39 அங்குல அளவு, 2,340 x 1080 Pixel Resolutin உடைய FHD+ தொடுதிரை தரப்பட்டுள்ளது.

தவிர Snapdragon 845 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் கொண்ட ஒரு மொடலும், 8GB RAM, 128GB அல்லது 256GB சேமிப்பு நினைவகம் கொண்ட மற்றுமொரு மொடலும், 10GB RAM மற்றும் 256GB சேமிப்பு நினைவகம் கொண்ட பிறிதொரு மொடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2 மெகாபிக்சல்கள், 24 மெகாபிக்சல்களை கொண்ட டுவல் செல்ஃபி கமெராக்களும், தலா 12 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers