ஒரே நாளில் 6 லட்சம் போன்களை விற்பனை! சாதனை படைத்த ரெட்மி நோட் 6 புரோ

Report Print Kabilan in மொபைல்

ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 புரோ, அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே 6 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளது.

சீன நிறுவனமான ஜியோமி மொபைல் போன் விற்பனையில் கோலோச்சி வருகிறது. குறைந்த விலையில் நல்ல தரத்துடன் இந்நிறுவனத்தின் போன்கள் விற்பனை செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களிடம் ரெட்மி போன்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், ஜியோமி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 6 புரோ போனை கடந்த 22ஆம் திகதி அறிமுகம் செய்தது. நோட் புரோ 4ஜிபி மெமரியுடன் ரூ.13,999 விலைக்கும், 6ஜிபி ரேம் மெமரியுடன் ரூ.15,999 விலைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த போன் பிரபல ஒன்லைன் விற்பனை தளங்களான பிளிப்கார்ட், எம் டாட்காம் ஆகியவற்றில் நேற்றைய தினம் ‘பிளாக் ஃப்ரைடே விற்பனை’ மூலம் ரூ.1000 தள்ளுபடியில் அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஒரே நாளில் சுமார் 6 லட்சம் ரெட்மி நோட் 6 புரோ போன்கள் விற்பனை செய்யப்பட்டன. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஜியோமியின் இந்திய நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் கூறுகையில், ‘Mi போன் ரசிகர்களால், ரெட்மி நோட் 6 புரோ முதல் நாளிலேயே 6 லட்சம் போன்கள் விற்றுள்ளது. அதுவும் விற்பனை ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஸ்டாக்குகள் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்