இரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

ZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

ZTE Nubia எனும் இக் கைப்பேசியானது வழமையான கைப்பேசிகளை விடவும் சற்று மாறுபட்டதாக காணப்படுகின்றது.

காரணம் முன்புறம் மற்றும் பின்புறம் என இரு பக்கங்களிலும் தொடுதிரையினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் முன்புறமாக உள்ள திரை 6.26 அங்குல அளவுடையதாகவும், 2280 x 1080 Pixel Resolution உடையதாகவும் இருப்பதுடன் Full HD+ தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.

பின்புறமாகவுள்ள திரை 5.1 அங்குல அளவு, 720 x 1520 Pixel Resolution என்பவற்றுடன் HD+ தொழில்நுட்பம் உடையதாக இருக்கின்றது.

இவற்றுடன் Qualcomm Snapdragon 845 Processor, பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB RAM, 64GB இலிருந்து 256GB வரையான சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளன.

மேலும் தலா 16 மற்றும் 24 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெராக்களை கொண்டுள்ளன.

எனினும் செல்ஃபிக்கான கமெரா தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இக் கைப்பேசியின் விலையானது 473 டொலர்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்