Nokia 9 கைப்பேசி விரைவில் அறிமுகம்

Report Print Givitharan Givitharan in மொபைல்

நோக்கியா நிறுவனம் அன்ரோயிட் கைப்பேசிகளை வடிவமைக்க ஆரம்பித்ததில் இருந்து அடுத்தடுத்து புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இவற்றின் வரிசையில் Nokia 9 எனும் புதிய கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியின் வடிவம் மற்றும் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 21ம் திகதி ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை நடாத்தி குறித்த கைப்பேசி வெளியிடப்படும் திகதி உட்பட அதன் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கவுள்ளது.

ஊடகவியலாளர் மாநாடு தொடர்பான விபரத்தினை நோக்கியா நிறுவனம் தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers