இணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள்

Report Print Kavitha in மொபைல்

TENAA என்ற சீன வலைதளம் மோட்டோரோலா நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன்கள் XT1943 மற்றும் XT1942 மாடல் எண்களை லீக் ஆகியுள்ளது.

தற்சமயம் மோட்டோரோலாவின் P30, P30 நோட் மற்றும் P30 பிளே ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வ சீன வலைதளத்தில் பட்டியலிட்டுள்ளது.

XT1943 மாடல் நம்பர் கொண்டிருந்த மொபைல் P30 என்றும், XT1942 மாடல் எண் கொண்டிருந்த மொபைல் P30 நோட் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் மோட்டோரோலா ஒன் மற்றும் ஒன் பவர் என்ற பெயர்களில் ஆன்ட்ராய்டு ஒன் பிரான்டிங் உடன் சர்வதேச சந்தையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் மோட்டோ இசட்3 ஆகஸ்டு 15-ம் தேதியிலேயே அறிமுகமாகவுள்ளது மற்றும் இந்த நிகழ்விலேயே இரண்டு புதிய மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்