ஒரே ஒரு விமானம்... 145 நாடுகளின் பயணிகள்: வரலாறு படைத்த விமான சேவை நிறுவனம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் 48-வது தேசிய தின கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் வரலாறு படைத்துள்ளது.

ஐக்கிய அமீரகமானது தமது 48-வது தேசிய தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகிறது.

பல நாட்கள் நீளும் இந்த கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அங்குள்ள மாகாண அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனமானது ஐக்கிய அமீரகத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில்,

பல மொழி, மதம், கலாச்சாரம் என பின்பற்றும் 145 நாடுகளில் உள்ள சுமார் 540 நபர்களுக்கு அழைப்பு விடுத்து விமான பயணம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

வெள்ளியன்று பகல் உள்ளூர் நேரப்படி 1.03 மணியளவில் புறப்பட்ட இந்த விமானமானது ஐக்கிய அமீரகத்தின் 7 மாகாணங்களையும் வலம் வந்துள்ளது.

குறித்த பயணத்தில் அந்தந்த நாடுகளின் கலாச்சார உடையில் பயணிகள் பங்கேற்க வாய்ப்பளித்திருந்தது.

மட்டுமின்றி 22 நபர்கள் கொண்ட விமான ஊழியர்கள் குழுவில் 18 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் பங்கேற்றுள்ளனர்.

பொதுவாக எமிரேட்ஸ் விமானங்களில் 15 நாட்டவர்களை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றுவார்கள். மட்டுமின்றி, ஒரு எமிரேட்ஸ் விமானத்தில் பொதுவாக 50 நாடுகளை சேர்ந்த பயணிகள் பயணம் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

145 நாடுகளை சேர்ந்த பயணிகளை ஒரே விமானத்தில் உட்படுத்தியது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

இந்த சிறப்பு பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்