சவுதியில் நிகழ்ச்சியின் போது மேடையில் ஏறி கலைஞர்களை கத்தியால் குத்திய மர்ம நபர்: சிக்கிய காட்சி

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி தலைநகரில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருந்து போது மர்ம நபர் ஒருவன், மேடையில் ஏறி கத்தியால் கலைஞர்களை குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தலைநகர் ரியாத்தில் al-Malaz மாவட்டத்தில் உள்ள கிங் அப்துல்லா பின் அப்துல்ஸீஸ் பார்க் தியேட்டரில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த ரியாத் பொலிஸ் கூறியதாவது, சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு அப்துல்ஸீஸ் பார் தியேட்டரில் கத்திக்குத்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்பு படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்தனர்.

இந்த தாக்குதலில் ஒரு பெண் உட்பட 3 நாடக கலைஞர்கள் கத்தியால் தாக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை சம்பவயிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தாக்குதல் நடத்தியவர், 33 வயதான ஏமனில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிசார் தரப்பில் தகவல் தெரிவக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மூன்று கலைஞர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்