சிரியா போரில் அமெரிக்கா காட்டிக் கொடுத்தது... ரஷ்ய பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சிரியாவின் குர்திஷ் போராளிகளை அமெரிக்கா காட்டிக் கொடுத்தது, கைவிட்டது என்று ரஷ்ய பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov உள்ளுர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், சிரியாவின் குர்திஷ் போராளிகளை அமெரிக்கா காட்டிக் கொடுத்தது.

ரஷ்யா மற்றும் துருக்கி இடையேயான ஒப்பந்தத்தின் படி சிரியா எல்லையில் இருந்து குர்திஷ் திரும்ப பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில், துருக்கி படையால் தாக்கப்படுவீர்கள் என எச்சரித்துள்ளார்.

சிரிய எல்லைக்கு அருகில் இருக்கவும், துருக்கிய ராணுவத்தை எதிர்த்துப் போராடவும் குர்திஷ்களை அமெரிக்கா ஊக்குவிப்பதாகத் தெரிகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில், ரஷ்யாவும் துருக்கியும், ரஷ்ய தயாரித்த எஸ் -400 ஏவுகணையை துருக்கிக்கு கூடுதலாக வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு விற்பனை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்