திருமணமான நாள் முதல் உள்ளங்கையில் வைத்து தாங்கிய கணவன்: பதிலுக்கு மனைவி செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in மத்திய கிழக்கு நாடுகள்

திருமணமான நாள் முதல் அன்பைப் பொழிந்து, பரிசுகளை வாரி வழங்கி, வேலையைப் பகிர்ந்து கொண்ட கணவனிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கிறார் ஒரு பெண், அதற்கு அவர் கூறிய காரணம், தன் கணவர் தன்னிடம் சண்டையே போடமாட்டேன்கிறார் என்பதுதான்.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது வாழ்க்கை நரகமாக இருப்பதாகக்கூறி விவாகரத்து கோரியிருக்கிறார்.

தனது கணவர் திருமணமான நாளிலிருந்து ஒரு நாள் கூட தன்னிடம் சண்டை போடவில்லை என்றும், வாக்குவாதம் செய்ததில்லை என்றும் எப்போதுமே தன்னிடம் இரக்கம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

அவரது அன்பும் பரிவும் மிகவும் அதிகமாக இருப்பதால் அவரிடமிருந்து பிரிய விரும்புவதாக தெரிவித்துள்ளார் அவர்.

அவரது அன்பால் திணறிப்போயிருக்கிறேன், நான் கேட்காமலே வீட்டை சுத்தம் செய்வதிலும் உதவுகிறார் அவர், என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார் அந்தப்பெண்.

ஒருமுறை தனது கணவரிடம் அவர் குண்டாக இருப்பதாக அந்த பெண் குறை கூற, உடனடியாக உடல் எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சியில் இறங்கிய அவர், அதனால் தனது காலையும் உடைத்துக் கொண்டாராம்.

இவ்வளவும் செய்தபின்னரும், அந்தபெண் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார்.

ஒரு நாளாவது எங்களுக்குள் சண்டை வரும் என்று ஆவலுடன் காத்திருகிறேன், ஆனால் என் காதல் கணவர் எப்போதும் என்னை மன்னித்து, தினமும் பரிசுமழை பொழிகிறார் என்று கூறியுள்ளார் அந்த பெண்.

அந்த கணவரோ விவாகரத்துக் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

வழக்கை ஒத்திவைத்துள்ள நீதிமன்றம், தங்கள் பிரச்னையை தாங்களே தீர்த்துக் கொள்ள, அவர்களுக்கு ஒரு வாய்ப்பளித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்