அமெரிக்காவுடனான மோதலுக்கு தீர்வு..! ஈரான் ஜனாதிபதியின் ஒரே ஒரு நிபந்தனை: பணிவாரா டிரம்ப்?

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வரும் உச்சகட்ட பதற்றத்தை குறைக்க அமெரிக்காவிற்கு ஈரான் ஜனாதிபதி ஒரே ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளார்.

2015 உலக நாடுகளுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை தொடர்ந்து ஈரான்-அமெரிக்கா இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. தற்போது, ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் பிரித்தானியா கைகோர்த்துள்ளது.

இந்நிலையில், ஈரான் அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி கூறியதாவது, ஈரானுடனான அமைதி அனைத்து அமைதிக்கும் தாய் போல பேரமைதியாக இருக்கும், ஈரானுடனான போரும் அனைத்து போர்களுக்கும் தாய் போல பயங்கர மோசமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அது அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும் என்று ரூஹானி குறிப்பிட்டார்.

மேலும், ஈரான் இஸ்லாமிய குடியரசு பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிக்கிறது, அமெரிக்கா உண்மையிலேயே பேச விரும்பினால் ஒரே ஒரு நிபந்தனை தான், வேறு எதற்கும் முன் அது அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும் என்று ரூஹானி கூறினார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்