சவுதி விமான நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்: ஹவுத்தி அட்டகாசம்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதியின் விமான நிலையம் மற்றும் விமான தளங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சவுதியில் உள்ள கிங் காலித் விமான நிலையம் மற்றும் அபா மற்றும் நஜ்ரான் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால், விமானம் நிலையம் நோக்கி வந்த ஹவுத்தி ஆளில்லா விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக, ஏமனில் ஹவுத்திக்கு எதிராக சண்டையிட்டு வரும் சவுதி தலைமையிலான கூட்டுப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. இந்தத் தாக்குதல் குறித்து சவுதியின் அதிகாரபூர்வ இணையப் பக்கங்களில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

கடந்த சில மாதங்களாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இதில் தொடர்ந்து சவுதியின் விமான நிலையங்களைக் குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அபா விமான நிலையம் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்