தரையில் மோதி வெடித்து சிதறிய ஈரான் போர் விமானம்: காரணம் யார்?

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

பாரசீக வளைகுடா கடற்கரைக்கு அருகே ஈரானிய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஈரானிய தெற்கு மாகாணமான புஷெர் உள்ள டாங்கெஸ்டன் கவுண்டிக்கு அருகே விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது. உள்ளுர் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு விமானம் விபத்துக்குள்ளானதாக டாங்கெஸ்டன் ஆளுநர் அப்தோல்-ஹொசைன் ரபீபூர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாகவும், விமானத்தில் பயணித்த விமானி மற்றும் துணை விமானி இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அமெரிக்கா, பிரித்தானியா நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் விமானம் விபத்து குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்