வளைகுடாவில் மீண்டும் பதற்றம்: மேலும் ஒரு வெளிநாட்டு கப்பலை சிறைபிடித்ததது ஈரான்

Report Print Vijay Amburore in மத்திய கிழக்கு நாடுகள்

எரிபொருள் கடத்தி வந்த வெளிநாட்டு எண்ணெய் கப்பலை ஈரான் சற்றுமுன் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

"சில அரபு நாடுகளுக்கு எரிபொருள் கடத்தி வந்ததாக பாரசீக வளைகுடாவில் ஒரு வெளிநாட்டு எண்ணெய் டேங்கரை ஈரான் கடற்படை கைப்பற்றியுள்ளன ”என்று தளபதி ரமேசன் ஜிராஹி தகவல் வெளியிட்டுள்ளதாக அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ளது.

அந்த கப்பலில் 700,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் செல்லபட்டதாகவும், கப்பலில் இருந்த பல்வேறு தேசங்களைச் சேர்ந்த ஏழு மாலுமிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானின் எண்ணெய் துறை மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா கடுமையாக்கிய பின்னர் பெரும் பதற்றத்திற்கு மத்தியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பித்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்