கத்தாரில் போர் விமானங்களை குவித்தது அமெரிக்கா.. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடான கத்தாரில் அமெரிக்கா தனது போர் விமானங்களை குவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா படைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் வகையில் எஃப் -22 உயர் ரக போர் விமானங்களை கத்தாருக்கு அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

எனினும், எத்தனை விமானங்கள் அனுப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் அந்த அறிக்கையில் வெளியிடவில்லை. கத்தாரில் உள்ள அல் உதீட் விமான தளத்தில் ஐந்து போர் விமானங்கள் தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எஃப் -22 உயர் ரக போர் விமானம், ரேடார் அல்லது சோனார் மூலம் கண்டறிவதை கடினமாக்கும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பொருளாதார தடை, எண்ணெய் கப்பல்கள் தாக்குதல், அமெரிக்கா கண்காணிப்பு விமானம் தாக்குதல், ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் அனுமதி வழங்கி இறுதிக்கட்டத்தில் பின்வாங்கியது என ஈரான், அமெரிக்கா இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கத்தாரில், அமெரிக்கா தனது போர் விமானங்களை குவித்துள்ளது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்