உடனடி தாக்குதல்.. ஈரானுக்கு நேரம் குறித்த டிரம்ப்: ஓவர் நைட்டில் நடந்த திருப்பம்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஓவர் நைட்டில் ஓமன் மார்க்கமாக உடனடி தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா கண்காணிப்பு விமானத்தை தாக்கியதாக ஈரான் அறிவித்ததை அடுத்து ஈரான் மீது இராணுவ தாக்குதல் நடத்த டிரம்ப் அனுமதி வழங்கியதாக செய்தி வெளியானது. ஆனால், கடைசி நிமிடத்தில் தாக்குதல் பின்வாங்கப்பட்டது.

இந்நிலையில், ஓமன் மார்க்கமாக டிரம்ப் செய்தி அனுப்பியதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், ஈரானுடனான எந்தவொரு போருக்கும் நான் எதிரானவன். சில பிரச்சினைகள் குறித்து ஈரானுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறிய டிரம்ப், இதற்கு, ஈரான் குறுகிய காலத்திற்குள் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ளாராம்.

ஆனால், ஈரானின் உடனடி பதில் குறித்து நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி முடிவு செய்ய வேண்டும் என ஈரான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் மற்றொரு அதிகாரி கூறியதாவது, எங்கள் தலைவர் பேச்சுவார்த்தைக்கு எதிரானவர், ஆனால், டிரம்ப் அனுப்பிய செய்தி குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் முடிவெடுப்பார். ஈரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலும் பிராந்திய மற்றும் சர்வதேச விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...