அமெரிக்காவை தொடர்ந்து நெதர்லாந்து அதிரடி.. டிரம்பின் திட்டமே இது தான்: ஈரான் ஓபன் டாக்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

அமெரிக்காவை தொடர்ந்து ஈரான் வான்வெளியில் தனது நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் பறக்காது என நெதர்லாந்து விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கேஎல்எம் ராயல் டச்சு விமான நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேஎல்எம் நிறுவன விமானங்கள் ஈரான் வான்வெளி வழி பாதையை தவிர்க்கும், அவ்வழியாக செல்லும் விமானங்கள் மாற்று பாதையில் செல்லும் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு சொந்தமான கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை தாக்கியதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே உச்சக்கட்ட பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்றிரவு முதல் ஈரான் வான்வெளியில் அமெரிக்கா விமானங்கள் பறக்காது என அமெரிக்கா அதிரடியாக அறிவித்தது. தற்போது, அமெரிக்காவை தொடர்ந்து நெதர்லாந்து ஈரானை வான்வெளியை தவிர்த்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமி, ஈரான் ஃபோபியா ஆதாவது ஈரானுக்கு எதிரான வொறுப்பை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. பிராந்தியத்தில் மிகவும் சிக்கலான மற்றும் சந்தேகத்திற்கிடமான நிலைமை உருவாகியுள்ளது.

இவை அனைத்தும் ஈரான் பயத்தை உருவாக்குவதற்கும், இஸ்லாமிய குடியரசிற்கு எதிராக ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கும் அமெரிக்கா இவ்வாறு செய்கிறது என ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமி தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்