ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி.. ஏமன் தலைநகரை சூரையாடிய சவூதி கூட்டுப்படை

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சவூதியில் உள்ள விமான நிலையம் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமனில், சவூதி தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

யூன் 12ம் திகதி நேற்று சவூதியில் உள்ள அபா விமான நிலையத்தின் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில், 26 பேர் காயமடைந்தனர்.இதற்கு கண்டனம் தெரிவித்த சவூதி தலைமையிலான கூட்டுப்படை கண்டிப்பாக இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இன்று ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமன் தலைநகர் சனாவில் சவூதி தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில் சவூதி வெளியுறவுத் துறை அமைச்சர் அன்வர் கூறும்போது, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் பிளவுப்பட்டு இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. ஹௌதி கிளர்ச்சியாளர்க்கு எதிர்ப்பை ஈரான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

சவூதி தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்