சவூதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்.. பெண்கள், குழந்தைகள் சிக்கினர்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்
458Shares

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் சிக்கி காயமடைந்துள்ளனர்.

சவூதியின் தெற்கு பகுதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையமான அபா விமானநிலையத்தின் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சவூதி தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது.

மேலும், இத்தாக்குதலை ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி போராளிகள் குழு நடத்தியுள்ளதாகவும், ஈரானின் ஆதரவுப்பெற்ற ஹௌதி குழுவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என சவூதி தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது.

அபா விமான நிலையத்தின் வருகை அரங்கத்தை ஏவுகணை தாக்கியுள்ளது. இதில், மூன்று பெண்கள், இரண்டு குழந்தைகள் என மொத்தம் 26 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சவூதி,ஏமன் மற்றும் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தாக்குதலால் அதிக பொருள் சேதத்தை ஏற்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபா விமான நிலையம் ஏமன் எல்லையில் இருந்து 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை தாக்குதலின் மூலம் ஈரானிடம் இருந்து மேம்பட்ட ஆயுதங்களை ஹௌதி குழு பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என சவூதி தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்