பிரசவ வலியுடன் மருத்துவமனை விரைந்த பெண்மணி... விபத்தில் சிக்கிய வாகனம்: பின்னர் நடந்த சம்பவம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

கட்டார் நாட்டில் பிரசவ வலியுடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வாகன விபத்தில் சிக்கிய பெண்மணி குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

கட்டார் நாட்டில் குடியிருக்கும் எரித்ரிய நாட்டு பெண்மணியான 36 வயது முன அப்தலாவல் என்பவருகே இக்கட்டான நிலையில் மருத்துவர்கள் உதவி புரிந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் திகதி இச்சம்பவம் நடந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியான முன, பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கணவர் இப்ராகிம் மற்றும் 3 வயது மகளுடன் தங்களது காரில் மருத்துவமனை சென்றுள்ளனர்.

மருத்துவமனை செல்லும் வழியில் இவர்களது வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் முனவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட கணவர் இப்ராகிம், உடனடியாக 999 எண்ணுக்கு தகவல் அளித்து ஆம்புலன்ஸ் சேவைக்கு கோரியுள்ளார்.

தகவல் அறிந்து ஒரு நிமிடத்திற்குள் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர், ஆபத்தான நிலையில் இருந்த முனவை மீட்டு அருகாமையில் உள்ள ஹமத் பொது மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இதனிடையே குழந்தை வெளியே வரும் நிலையில் இருந்துள்ளது. முனவின் தலையில் ஏற்பட்ட காயங்களை பரிசோதனை செய்த மருத்துவர், பிரசவம் நடந்த பின்னர் எஞ்சிய சிகிச்சைகள் மேற்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் முன தனது இரண்டாவது பிள்ளையை பெற்றெடுத்தார். 6 முறை கரு தங்காத நிலையில், பல வேண்டுதல்களுடன் மருத்துவமனைக்கு திரும்பியதாக கூறும் முன,

எந்த சிக்கலும் இன்றி பிரசவம் நடக்க வேண்டும் என்று மன்றாடியபடியே சென்றுள்ளதாக கூறுகிறார். ஆனால் வழியில் விபத்தில் சிக்கியதால் அனைத்தும் முடிந்தது என்றே கருதியதாகவும், இறுதியில் கடவுள் தம்மை கைவிடவில்லை என முன தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்