ஐந்து முறை கைவிட்ட அதிர்ஷ்டம்: லொட்டரியில் மில்லியன்களை அள்ளிய இளைஞர்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் இந்திய இளைஞர் ஒருவருக்கு லொட்டரியில் சுமார் 20 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஐக்கிய அமீரகத்தின் துபாயில் பணியாற்றி வருகிறார் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த்.

அபுதாபி நாட்டின் பிக் டிக்கெட் என்ற லொட்டரியை தொடர்ந்து வாங்கும் பழக்கம் கொண்டவர் இவர்.

ஆனால் கடந்த 5 முறையும் இவரை அதிர்ஷ்டம் கைவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 6-வது முறையாக பிரசாந்த் வாங்கிய லொட்டரி டிக்கெட்டில் அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது.

ஐக்கிய அமீரக பணத்தில் 10 மில்லியன் திர்ஹாம் பரிசாக பெற்றுள்ளார் பிரசாந்த். இது இந்திய மதிப்பில் சுமார் 19.46 கோடி ரூபாய் என கணக்கிடப்படுகிறது.

தற்போது இந்த தொகையை என்ன செய்ய வேண்டும் என இதுவரை முடிவு செய்யவில்லை எனவும் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்